மதுரையில் வைத்து ரவுடி பேபி சூர்யா ஆண் நண்பருடன் கைது… சைபர் கிரைம் போலீசார் அதிரடி ; பின்னணியில் பெண் யூடியூபர்..!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 4:23 pm

மதுரையில் வைத்து ரவுடி பேபி சூர்யா ஆண் நண்பருடன் கைது… சைபர் கிரைம் போலீசார் அதிரடி ; பின்னணியில் பெண் யூடியூபர்..!!

மதுரையில் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகிய இருவரை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக்- டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது பதிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.

மக்கள் பார்வை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த பெண் சித்ரா. இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பெண் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் மாநகர் சைபர் கிரைம் போலீசார் இன்று காலை ரவுடி பேபிசூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!