காவிரி நீர் தர மறுத்தால் இண்டியா கூட்டணியில் இருந்து விலக திமுக தயாரா? அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 5:14 pm
Thambidurai - Updatenews360
Quick Share

காவிரி நீர் தர மறுத்தால் இண்டியா கூட்டணியில் இருந்து விலக திமுக தயாரா? அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தொகரப்பள்ளி கிராமத்தில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பேருந்து பேருந்து நிறுத்தம் மற்றும் நியாய விலை கடை கட்டிடம் கட்டும் கட்டும் பணியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு எதிர்ப்பின் காரணமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் உச்ச நீதிமன்றம் சென்று காவேரி பிரச்சினைகளை இறுதி தீர்ப்பு பெற்றார்.

காவிரி பிரச்சனைக்காக அதிமுகவின் 39 உறுப்பினர்கள் மத்திய அரசு வற்புறுத்தி 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி பிரச்சினையில் தீர்ப்பை நிறைவேற்றினம்.

ஆனால் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரிய குரல் எழுப்பவில்லை. அதன் அலட்சியம் காரணமாக கர்நாடக அரசும் மெத்தனமாக செயல்படுகிறது.


தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவது கர்நாடகா அரசின் கடமை தமிழக அரசு காவிரி பிரச்சனையில் நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் மத்திய அரசை வலியுறுத்தியது மட்டுமே தவிர திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கர்நாடக அரசை வலியுறுத்தவில்லை.

தமிழக அரசும் முதலமைச்சரும் காவிரி நீர் பெற அவர் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் காவிரி நீரை திறக்க கூட்டணி உத்தரவிட வேண்டும் அப்படி இல்லை எனில் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்.

காவிரி நீர் தமிழகத்திற்கு தராவிட்டால் இந்தியா கூட்டணியில் இருக்க மாட்டோம் என முதலமைச்சர் எச்சரிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு செய்ய தவறினால் கூட்டணியில் இருந்து வெளியேறுவது நியாயமான முடிவாக இருக்கும் அப்படி திமுக செய்வார்களா என்பது கேள்விக்குறி.


ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த போது தான் பாஜக அரசை 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடிக்கினோம்.அதன் பிறகு காவிரி உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது அதேபோல் 2016 ஆம் ஆண்டு அதிமுக தனித்து போட்டியிட்டது தற்போது வருகின்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேர்தலை சந்தித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முறையாக செய்யவில்லை அனைத்து மகளிர்க்கும் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்துவிட்டு ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மட்டும் உரிமை தொகை இந்த அரசு வழங்குகிறது இதுபோல் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற வில்லை.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் வாக்களிப்பது இல்லை 1952 ஆம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி தழுவியது. 155 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் காங்கிரஸ் கட்சி பெற்றது. 166 சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சிகள் பெற்றது.

அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத அவலம் ஏற்பட்டது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் குடும்ப ஆட்சி முற்றுப்புள்ளி வைக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நாட்டு மக்கள் ஆக்குவார்கள் நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Views: - 290

0

0