நாய் மீது கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த குடும்பம்.. ஷாக் சிசிடிவி.. புகார் கொடுத்த PFA அமைப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2025, 4:51 pm

தஞ்சாவூர் மாவட்டம் – பள்ளி அக்ரஹாரம் VMT நகர் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், ஒரு பெண் நாயை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதும், People For Animals அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், புகாரியின் அடிப்படையில் ஒரு பெண் ஒரு ஆண் உட்பட நான்கு சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

இறந்து போன நாயை பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் நாய் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்ததும். மேலே குறிப்பிட்டுள்ள ஆறு பேரும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது,

விலங்குகள் மீதான கொடுமை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்களும் விலங்குகள் ஆர்வலரும் குற்றவாளிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

“மனிதனின் பாதுகாப்பைப் போலவே விலங்குகளின் உயிரையும் காக்க வேண்டும்” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!