கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை : வளர்த்த நாயையும் கொன்ற சோகம்!!

17 October 2020, 6:50 pm
Family Suicide - Updatenews360
Quick Share

சென்னை : கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதில் தந்தை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை திரு.வி.க நகர் ராமசாமி பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவர் பிளம்மிங் வேலை சொந்தமாக செய்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த நாய் இறந்து கிடைந்த நிலையில் இது குறித்து பழனியின் தந்தை கேட்டதற்கு சரியான பதில் கூறமால் வெளியே வந்த பழனி பின் பக்கமாக இரண்டாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்

நீண்ட நேரம் ஆகியும் வெளியே சென்ற பழனி திரும்பி வரவில்லை. இதையடுத்து பழனியின் தந்தை மேலே சென்று பார்த்ததில் சந்தேகம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்து வீட்டில் பூட்டை உடைத்து பார்த்த போது மணைவி மகன் மகள் இறந்து கிடந்தது தெரியவந்தது

உடனே இரண்டாவது மாடிக்கு சென்று பார்த்த போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கையில் ரத்த காயத்துடன் இருந்துள்ளார் மேலும் இது குறித்து திரு.வி.க நகர் காவல் நிலைத்தில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது

சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலிசார் பழனியை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மூன்று பேர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தார்

முதல் கட்ட விசாரணையில் பழனிக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை கடன் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருடன் வளர்த்து வந்த நாயையும் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது