ஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்!!

Author: Udayachandran
29 July 2021, 6:07 pm
Venu Aravinth-Updatenews360
Quick Share

சென்னை : பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரிய திரைகளில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ஆனால் சின்னத்திரையில் இவர் நடித்த சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தார். 1990ஆம் ஆண்டு ஒளிபரப்பான காஸ்ட்லி மாப்பிள்ளை, 1997ஆம் ஆண்டு கிரீன் சிக்னல் சீரியல் மூலம் பிரபலமானார்.

பின்னர் ராதிகா தயாரித்த வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமான வேணு அரவிந்த், செல்வி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் முத்து எங்கள் சொத்து, அந்த ஒரு நிமிடம் போன்ற படங்களில் நடித்த அவர், அலைபாயுதே, என்னவளே, நரசிம்மா, வல்லவன் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார்.

கலைமாமணி பெற்ற முதல் சின்னத்திரை நடிகர் என்று பெருமையும் வேணு அரவிந்துக்கு உண்டு. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேணு அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன் குணமடைந்தார்.

Vani Rani Serial actor Venu Aravind coma stage admitted in hospital

ஆனால் அவருக்கு மூளையிட் கட்டி இருப்பது தெரியவந்ததையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனால் வேணு அரவிந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேணு அரவிந்த் உடல்நிலை குறித்து கேள்விப்பபட்ட ரசிகர்கள் மற்றும் சக சின்னத்திரை நடிகர்கள் அவர் குணமடைய வேண்டி பிரார்த்தித்து வருகின்றனர்.

Views: - 379

0

1