மது போதையில் பிரபல பாடகர் மனோவின் மகன் செய்த செயல்… வழக்குப்பதிந்த போலீஸ்.. வெளியான வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 2:20 pm

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயிலை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர்.

அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன் உட்பட ஐந்து பேர் மது போதையில் கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம் தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகின்றது.

இதில் கிருபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சிறுவனுக்கும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கிருபாகரன் கிழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஓட்டுக்காக ஒரு மதத்துக்கு வாழ்த்து.. இன்னொரு மதத்துக்கு வாழ்த்தில்ல : முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் சாடல்!

இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் சென்னை வளசரவாக்கம் காவல் காவல்துறையினர் விசாரணைக்காக பாடகர் மனோவின் மகன் உள்ளிடோரை காவல் நிலையம் அளித்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் காவல் காவல்துறையினர் விசாரணைக்காக பாடகர் மனோவின் மகன் உள்ளிடோரை காவல் நிலையம் அழைத்துள்ளனர். இதனிடையே மனோவின் மகன் உள்ளிட்டோர் போதையில் ரகளையில் ஈடுபடுவதோடு இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதையடுத்து இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…