மரவள்ளித் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது

16 July 2021, 4:56 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மரவள்ளித் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரத்தில் பொன்னுச்சாமி என்பவரின் மகன் முருகனின் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக, காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்றிருக்கிறார்கள். தோட்டத்தின் உள்ளே இருந்த ஏழு கஞ்சா செடிகளைப் பறித்த காவல்துறையினர், அந்த நிலத்தில் தற்போது விவசாயம் செய்துவரும் அய்யாக்கண்ணு (58) என்பவரைக் கைதுசெய்துள்ளனர்.

முருகனின் நிலத்தில் விவசாயம் செய்துவரும் அய்யாக்கண்ணு, அங்கேயே தங்கி விவசாயம் செய்துவருகிறார். இந்தநிலையில், அவர் மரவள்ளிக்கிழங்குத் தோட்டத்தின் இடையே கஞ்சா செடிகளை வளர்த்துவந்திருக்கிறார். எங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று ஏழு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, அய்யாக்கண்ணுவைக் கைதுசெய்திருக்கிறோம். அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இது தொடர்பாக மேலும் விசாரித்துவருகிறோம்” என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

Views: - 151

0

0