16ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.. விவசாயிகளை கொச்சைப்படுத்தியதாக புகார்

Author: Babu Lakshmanan
15 December 2021, 9:32 am
Quick Share

விவசாயிகளை கொச்சைப்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கண்டித்து விவசாயிகள் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் விளைநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த உயர்மின் கோபுரங்களினால் விவசாயிகளுக்கும், விளைநிலங்களுக்கும் பாதிப்பு என்று கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முறையிட்டு அன்றைய அதிமுக ஆட்சியில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போதைய முதல்வரும், அன்றைய எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அன்றைய எங்கள் போராட்டங்களை உணர்ந்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்தாக தெரிவித்தனர். தற்போதைய தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும் அன்றைய அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வுமான செந்தில்பாலாஜி, அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் விவாதித்தார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்றவுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் தங்களின் கோரிக்கைகளை அப்படியே விட்டு விட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆகவே அவரை கண்டித்து அவரது எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு கரூரில் சாகும் வரை பட்டினிப்போராட்டம் நடத்த வரும் 16ம் தேதி நடத்த உள்ளது. இதற்காக, கரூர் காவல்நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் அனுமதிக்காக சென்று மனு கொடுத்தனர்.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈஸன் முருகசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- ஆளுங்கட்சியாக அதிமுக இருக்கும் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், அரியணை ஏறிய நிலையில் அதை மறந்து விட்டார். தற்போதுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் விவசாயிகளை கொச்சைபடுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். ஆகவே அவரை கண்டித்து அவரது எம்.எல்.ஏ அலுவலகம் முன்னரே பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தப்போகிறோம், என அவர் தெரிவித்தார்.

Views: - 315

0

0