உரம் எனக்கூறி விற்கப்பட்ட சுண்ணாம்புக் கற்கள்: விவசாயிகளிடம் ரூ.1.26 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…!!

11 November 2020, 5:30 pm
perambalur uram - updatenews360
Quick Share

பெரம்பலூர்: உரம் என்று கூறி சுண்ணாம்புக் கற்களை விற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காசோளம் பயிரிட்டுள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம், கார்த்திக், துரைக்கண்ணு பாக்டாம்பாஸ் உரம் எனக்கூறி ஆயிரத்து 300 மூட்டைகளை 1 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

உரத்தை வாங்கிய விவசாயிகள் அதனை வயல்களில் தெளித்துள்ளனர். இதனையடுத்து, வயல்களில் பயிரிடப்பட்ட மக்காசோள பயிர்கள் திடீரென கருகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவசாயிகள், ஊர் தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இதனை, விசாரித்த ஊர் தலைவர்கள் உரம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது சுண்ணாம்புக்கல் என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, மோசடியை ஒப்புக்கொண்ட உர விற்பனையாளர்கள், அதற்கான பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

Views: - 17

0

0