‘தீவனங்களின் விலை அதிகமாயிருச்சு…ஆனால் பால் கொள்முதல் விலை உயரவில்லை’: ஆட்சியரிடம் முறையிட்ட தமிழக விவாசயிகள் சங்கத்தினர்..!!

Author: Rajesh
28 March 2022, 3:12 pm

கோவை: ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை அதிகரித்து வழங்க கோரி தமிழ்நாடு விவாசயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில், தவிடு, புண்ணாக்கு, தவிடு, பருத்திக்கொட்டை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

ஆனால் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து பாலை ரூ.28 ரூ.30 வரையில் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

கால் நடை வளர்ப்பு என்பது விவசாயிகளின் முக்கியமான தொழிலாக உள்ள சூழலில், இடு பொருட்கள் விலை ஏற்றத்தால், பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும்.” என்றார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?