திருச்சியில் இருந்து பிரதமர் மோடிக்கு ராக்கெட் விட்ட விவசாயிகள் : வேளாண் சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம்!!
30 November 2020, 6:24 pmதிருச்சி : டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கான நகலை ராக்கெட் போல செய்து பிரதமருக்கு அனுப்புவது போல பறக்கவிட்டனர்.
நாடு முழுவதும் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்த திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என விவசாயிகள் சங்கம் சார்பாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 300க்கு மேற்ப்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர் வேளாண் சட்ட அடங்கிய நகலை ராக்கெட் போல செய்து திருச்சியில் இருந்து பிரதமர் மோடிக்கு அனுப்பும் விதமாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் பாதுகாப்பு பணியில் 50 க்கு மேற்பட்ட போலீசார் ஈடுப்பட்டிருந்தனர்.
0
0