சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. பரிகாரத்தை தேடிப் போன இடத்தில் கற்பை பறித்த பூசாரி : கொடூர சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 November 2021, 6:46 pm
ராமநாதபுரம் : 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் பூசாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்படி கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய 16 வயது மகளான சிறுமியை பாலியல் ரீதியாக தந்தையே துன்புறுத்தல் செய்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக சூரங்கோட்டை காலனி அருகே உள்ள கொட்டகை கிராமத்தில் பூசாரி சிவக்குமார் என்பவரை சிறுமியின் தாயார் சந்தித்து தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கமாக தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக பூசாரி சிவகுமார் தாயிடம் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இனிமேல் அவரிடமிருந்து பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்ததால் இதை நம்பி சிறுமியை தாய் அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர்,
இதைப் பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தாயாரிடம் தெரிவித்த பொழுது, அதிர்ச்சியடைந்த தாய் ராமநாதபுரம் பஜார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பூசாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் போலீசார் சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறுமி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
0
0