உன் சேலையை அவிழ்த்திருவ… பள்ளிக்குள் நுழைந்து குடிபோதையில் தலைமையாசிரியை ஆபாசமாக பேசிய மாணவியின் தந்தை : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 2:22 pm
Drunke Father Ciritcise Teacher - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : மது போதையில் பள்ளியில் புகுந்த ஒரு மாணவியின் தந்தை தலைமை ஆசிரியை அருவருக்கதக்க ஆபாச வார்த்தை திட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கள்ள பெரம்பூரில் அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது நேற்று காலை பிரேயர் நடந்து கொண்டு இருந்தபோது, அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் தந்தை செல்வக்குமார் மதுபோதையில் பள்ளி நுழைந்து தகராறு செய்தான்.

அவனை பள்ளியை விட்டு வெளியே செல்லுமாறு தலைமை ஆசிரியை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் தலைமை ஆசிரியை அருவருக்க கூடிய ஆபாச வார்த்தைகளால் திட்டினான்.

மேலும் நீ பொம்பள தான உன் சேலையை அவிழ்த்து விடுவேன் என மிரட்டினான். இதனை தட்டி கேட்ட உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் கண்ணத்தில் ஒங்கி அறைந்தான். இதனை மேலும் தடுக்க முயன்ற ஆசிரியர் முருக பூபதிக்கு அடி விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை அளித்த புகாரின் பேரில் பள்ளிக்குள் ரகளையில் ஈடுப்பட்டு தலைமை ஆசிரியை இருக்கையில் அமர்ந்து ஆசிரியர் சட்டையை இழுக்கும் மாணவியின் தந்தை செல்வகுமாரை கள்ள பெரம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Views: - 507

1

0