பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை: விரக்தியில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை.!

3 September 2020, 10:27 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே பப்ஜி விளையாடிய தந்தை கண்டித்ததால் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதிக்குட்பட்ட கொமெட்டெரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் ஆலங்காயம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இவரது இளைய மகன் சீனிவாசன்(17) பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வீட்டிலேயே இருந்துள்ளார். வீட்டிலேயே இருந்த சீனிவாசன் கடந்த ஓராண்டாக செல்போனில் பப்ஜி கேம் ஐ விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். எப்போதும் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தாள் அவ்வப்போது பெருமாள் சீனிவாசனை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு நேற்று பப்ஜி கேம் உட்பட மேலும் 118 ஆண்ட்ராய்டு செயலிகளை தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சீனிவாசனை கண்ட அவரது தந்தை பெருமாள் செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் விரக்தியில் இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் இளைஞர் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனைப் பிடுங்கியதால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0