வாகனம் மோதி உயிரிழந்த பெண் சிறுத்தை : சிசிடிவி காட்சிகள் வைத்து வனத்துறையினர் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 3:11 pm
Leopard Dead - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திம்பம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, திம்பம் பகுதியில், சாலையை கடக்க முயன்ற சிறுத்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த அடிபட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்துபோன சிறுத்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் பொழுது, இறந்து போன சிறுத்தைக்கு 4 வயது இருக்கும் எனவும், இது பெண் சிறுத்தை எனவும், சிறுத்தை மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Views: - 382

0

0