தமிழகத்தில் அடுத்த மரணம்… வழக்கம் போல பள்ளிக்கு வந்த +2 மாணவி திடீர் உயிரிழப்பு : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 3:53 pm
Villupuram Student Dead - Updatenews360
Quick Share

விழுப்புரம் : பள்ளி வாயிலில் மயங்கி விழுந்த அரசு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

விழுப்புரம் அருகேயுள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சார்ந்த 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவி அஸ்வினி ஒட்டன் காடுவெட்டியை சார்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பள்ளி மாணவியின் பெற்றோரான பெருமாளுக்கு தெரியவரவே மாணவியை கண்டித்து உறவுக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்த அரசு பள்ளி மாணவி இன்று பூச்சி மருந்தினை குளிர்பானத்தில் கலந்து குடித்துவிட்டு பள்ளிக்கு வருகை புரிந்தபோது பள்ளியில் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக பள்ளியின் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு விசாரணை செய்தபோது தான் ஒருவரை காதலிப்பதால் பெற்றோர்கள் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாகவும் அது பிடிக்காமல் மருந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பள்ளி மாணவியை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து பள்ளி ஆசிரியர்கள் காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் பள்ளியில் விசாரனை செய்து மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் தான் காதலித்த அந்தோனி செல்வராஜ் மாமாவை விட்டு பிரிவதாகவும், மிஸ் யூ மாமா என்று கண்ணீருடன் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Views: - 144

0

0