வீதி வீதியாக வீடுகளை வாடகைக்கு எடுத்து விபச்சாரம்… கல்லா கட்டிய கும்பல் : போலீசார் நடத்திய வேட்டையில் சிக்கிய பெண்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 4:12 pm
Prostituition Arrest - Updatenews360
Quick Share

பெரியகுளத்தில் வீட்டில் வைத்து விபச்சாரம் செய்த நான்கு பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முதலிக்கோட்டை தெரு பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருந்து வரும் பெண் ஒருவர் விபச்சாரம் நடத்துவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரிய குளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அங்கு பெண்கள் உட்பட ஒரு ஆண் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கோம்பை, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் பெண்களை வரவழைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பெரியகுளத்தில் பல்வேறு வீடுகளில் இவர்கள் குடியிருந்து இது போன்று விபச்சாரத்தில் ஈடுபட்டு வீடை காலி செய்யச் சொல்லி வெளியே அனுப்பி வைத்ததாகவும் தற்போது முதலில் கோட்டை தெருப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒரு மாதமாக குடியிருந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விபச்சாத்தில் ஈடுபட்டவர்களிடம் இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெழியாக உள்ளதாக தெரிகிறது

Views: - 365

1

0