மீண்டும் DMK ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலையே இருக்காது.. BJPயின் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 9:46 pm
Pon
Quick Share

மீண்டும் DMK ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலையே இருக்காது.. BJPயின் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி பிஜேபி வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் காரணமாக 8கோடி தமிழர்களும் தங்கள் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என அச்சப்பட துவங்கியுள்ளனர் இதற்குக் காரணம் திமுக அரசு தான் என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவள கடத்தல் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல் மண்ணோடு மண்ணாக ஆகிவிடும் இதற்கு கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர்தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: இந்திய நாடு மணிப்பூர் போல மாறிவிடுவோமோ? PM மோடி பேச்சு குறித்து கனிமொழி அச்சம்!

இரண்டாவது கட்ட தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்ற அவர் தமிழகத்தில் பிஜேபி கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Views: - 125

0

0