சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு… நெல்லை பேருந்து நிலையம் குறித்து வழக்கு போட்டதால் ஆத்திரமா…? போலீசார் விசாரணை..!!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 4:50 pm
Quick Share

நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் (35). இவர், நெல்லையில் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டி திறக்கப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் குறித்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதேபோல, மாநகராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் நெல்லை மாநகராட்சியின் ரோடு காண்ட்ராக்டில் தனியார் நிறுவனம் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட விவகாரம் மற்றும் மணல் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், சமூக அக்கறையுடன் கேள்விகள் எழுப்பி வருகிறார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு… சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!!

இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பேட்மின்டன் கிளப்பில் விளையாடுவதற்காக சென்றிருந்தார். அப்போது அங்குவந்த ஒரு நபர், தான் வைத்திருந்த அரிவாளால் பெர்டின் ராயனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முதுகு, கைகளில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எதற்காக பெர்டின் ராயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட அதே தினத்தில், சமூக ஆர்வலர் மீது அரிவாள் வெட்டு நடந்திருப்பது நெல்லை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 273

    0

    0