வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. குளித்து கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் : சிக்கிய சிறுவன்!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 5:59 pm
vaigai
Quick Share

மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் கனமனையிலாலும் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரை விரகனூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன, அதில் ஒருவர் 10 வயது சிறுவன் விஜய் விஜய் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயன்று வருகிறார்.

இந்நிலையில் சிறுவன் விஜய் பள்ளி விடுமுறையை முன்னிட்டு குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் மதுரை விரகனூர் வைகை ஆற்று பகுதிக்கு சென்றுள்ளார்,
ஆற்று நீரில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளார்.

சிறுவன் ஆற்றின் நீரில் மூழ்கியதை கண்ட அவரது சக நண்பர்கள் பயந்து வெளியே வந்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: திண்டுக்கல்லில் புது வீட்டில் குடியேறிய பாமக வேட்பாளர் : வீடு மாறியது ஏன் என திமுக அரசை விளாசி புது விளக்கம்!

உடனடியாக தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மதுரை அனுப்பானடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு நீரில் மூழ்கி இருந்த சிறுவனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் போதே சிறுவனின் உயிரிழந்துள்ளார்.

பள்ளி விடுமுறையில் நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்க சென்ற 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 168

0

0