வாடகை தர 10 நாள் தாமதம்…. பெண்ணை வெளியே தள்ளி டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு பூட்டு ; கட்டிட உரிமையாளர் குடும்பம் அடாவடி!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 5:07 pm
Quick Share

கரூர் அருகே டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாடகை தர 10 நாள் தாமதமானதால் கடையின் உரிமையாளரை தாக்கிய கட்டிட உரிமையாளர் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம் பிரேம் நகர் விஸ்தரிப்பு வாங்கபாளையம் பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி (வயது 35). இவரது கணவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வரும் நிலையில், இவரது மகள் மருத்துவ படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இவர் வெங்கமேடு அம்மன் நகர் மெயின் ரோடு பகுதியில் SRE OMEGAA MINI STORE என்ற டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 15,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து கடந்த ஓராண்டுகளாக மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் நடத்தி வருகிறார். இந்த நிலையில், வாடகை முறையாக செலுத்தி வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்திற்கான வாடகை மார்ச் மாதத்தில் வழங்க வேண்டிய நிலையில், 10 நாள் தாமதம் ஆகயுள்ளது.

மேலும் படிக்க: பாஜக ஆபிசுக்கு எப்போ வரீங்க..? முன்கூட்டியே சொன்னால் பரிசு கொடுக்க தயாரா இருப்போம் : காங்கிரசுக்கு அண்ணாமலை பதிலடி!

இதனால், கட்டிட உரிமையாளர் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி கடைக்கு வந்து, அவரது மனைவி, மகன், மைத்துனர் ஆகியோர் புவனேஸ்வரியை வெளியே தள்ளி அவமானப்படுத்தியுள்ளார். மேலும், கட்டிட உரிமையாளரின் மனைவி பாபி, புவனேஸ்வரியை தாக்கி தரதரவென்று தரையில் இழுத்து சென்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மகன் கோகுல்ராஜ் மற்றும் உறவினர் பகவதி ஆகியோரும் புவனேஸ்வரியை தாக்க முற்பட்டனர். தொடர்ந்து, கடையை பூட்டி விட்டு சென்ற கட்டிட உரிமையாளரின் மனைவியின் அராஜகபோக்கு சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

மேலும், 50 நாட்களுக்கு மேலாகியும் கடை பூட்டப்பட்டதால் 15 லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம் ஆகி உள்ளது எனவும், வெங்கமேடு காவல்துறையினர் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரியை இன்று வா..? நாளை வா..? என சிஎஸ்ஆர் காப்பி அல்லது எஃப் ஐ ஆர் காப்பி போட்டு வழக்குப்பதிவு இதுவரை செய்யவில்லை என்றும் அவரது தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கடந்த 22 ஆம் தேதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகம் புகார் அளித்தார்.

தொடர்ந்து முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது குறித்து டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வெங்கமேடு காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என அறிவுறுத்திய நிலையில், வெங்கமேடு காவல் ஆய்வாளர் உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டி உள்ளதாக பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 253

0

0