ஷாருக்கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. ரசிகர்கள் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 8:59 pm
shah
Quick Share

ஷாருக்கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. ரசிகர்கள் சோகம்!

பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேற்று மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் படிக்க: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேளுங்க.. இல்லைனா எதிர்விளைவு சந்திக்க நேரிடும் : மோடிக்கு சீமான் எச்சரிக்கை!

ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியது.

Views: - 157

0

0