எல்லை மீறிய பேச்சு.. கட்டுப்பாட்டோட நடந்துக்கோங்க : பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 10:04 pm
Kharge
Quick Share

எல்லை மீறிய பேச்சு.. கட்டுப்பாட்டோட நடந்துக்கோங்க : பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய இரு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கடந்த மூன்று கட்ட தேர்தல் நிறைவடைந்த பின்னர் இரண்டு தேசிய கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களின் எல்லை மீறும் தேர்தல் பிரசாரம் தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இரு தேசிய கட்சிகளான பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி அறிவுறுத்தியுள்ளது

அதில் பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களின் நட்சத்திர பேச்சாளர்கள் ஜாதி, மத மற்றும் வகுப்புவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய எந்த ஒரு பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது.

அதனை உடனே நிறுத்த வேண்டும். பிரசாரத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

காங்., தலைவர் மல்லிகார்ஜூஜ கார்கேவுக்கு எழுதியுள்ள கடித விவரம், நமது ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டம் குறித்தும், இந்திய அரசியலமைப்பு சாசனம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என தரம் தாழ்ந்து பேசுவதையும் நிறுத்த வேண்டும்.

மேலும் படிக்க: லாரி ஓட்டுநரை பட்டாகத்தியால் பதம் பார்த்த கும்பல்.. மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பரபரப்பு : நடுங்கிய வேலூர்!

இது போன்ற தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய பிரசாரத்தை காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாரகர்கள் வெளியிடக்கூடாது அரசியல் சாசனத்தை விமர்சிக்கக்கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 178

0

0