பண்டிகை கால சிறப்பு ரயில்கள் : இன்று முதல் முன்பதிவு தொடங்கியது!!

15 October 2020, 11:19 am
Special Trains Reservation - Updatenews360
Quick Share

பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

நவாராத்திரி பண்டிகையொட்டி சென்னை டெல்லி திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – மதுரை இடையே வரும் 19ம் தேதி முதல் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை – கோவை இடையே செவ்வாய் தவிர வாரத்தின் 6 நாட்கள் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதே போல சென்னை – டெல்லி இடையே திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூரந்தோ ரயில் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாசிக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதே போல, திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கும் கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

Views: - 48

0

0