ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!
Author: Udayachandran RadhaKrishnan2 May 2025, 6:55 pm
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர மக்கள் மீது வரி விதிக்கவில்லை, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியை சேர்த்து தான் ஜிஎஸ்டி வந்துள்ளது. மக்கள் பயன்படுத்தும் பொருள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு என கூறினார்.
இதையும் படியுங்க: திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!
சாரி வாரி கணக்கெடுப்பு திமுகவின் வெற்றி என கூறுவது ஏற்கமுடியாது. அக்கட்சிதான் சமத்துவம் என கூறுகிறது. குடிநீரில் மலம் கலந்த நிகழ்வு தமிழகத்தில் தான் நடந்தது. இது போன்ற நிகழ்வு வடநாட்டில் கூட நடக்கவில்லை.

அதிமுக பாஜக கூட்டணியை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை. ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றம் வரை சென்று அமைச்சர் ஒருவரும், இன்னொரு அமைச்சரும் வேறொரு விஷயத்துக்காக பதவி விலகியுள்ளனர்.

ஊழல் கூட்டணி எங்கள் கூட்டணி பற்றி பேசுவதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
