குடி கும்மாளத்துடன் நள்ளிரவு வரை நீடித்த பைனான்சியர் பர்த்டே பார்ட்டி : சிக்கிய முக்கியப்புள்ளிகள்?!

18 April 2021, 4:41 pm
Bday Party -Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : பைனான்ஸ் தொழில் செய்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய வழக்கறிஞர்கள் தொழிலதிபர்கள் குற்றவாளிகள் என 22 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரம் அம்மன் கார தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 32) என்பவர் பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய பிறந்த நாள் நேற்று தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் கொண்டாடப்பட்டது.

அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் நண்பர்கள் வருகைக்காக அறைகள் எடுக்கப்பட்டு மதுபானம் மற்றும் அசைவ உணவுக்கு ஆடர் அளிக்கப்பட்டிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், குற்ற எண்ணிக்கை உள்ளவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நேற்று காலையில் இருந்து மது விருந்துடன் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழா நேற்று நள்ளிரவு வரை நீண்டு கொண்டு சென்றது. இந்த விழாவில் 10க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை குற்றவாளிகள் கலந்துகொண்டதாக சிவகாஞ்சி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில் சிவகாஞ்சி காவல்துறையினர் திடீரென நேற்று நள்ளிரவு தமிழ்நாடு ஓட்டலுக்கு சென்று விசாரணை செய்தனர். காவல்துறை வருவதை தெரிந்து கொண்ட பலர் அங்குள்ள காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர் .

அப்போது காவல்துறை பணி செய்ய விடாமல் அவரை தடுத்து நிறுத்தி வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மிகவும் அநாகரிகமாகவும் மோசமாகவும் நடந்து கொண்டார். அதற்கு அவருடைய நண்பர்கள் துணை புரிந்தனர்.

அதனால் கோபமடைந்த காவல்துறையினர் 22 நபர்களை பிடித்து சிவகாஞ்சி காவல் துறையை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். காவல் நிலையத்துக்கு முன்பாகவே ஸ்டாலின் உள்ளிட்ட பல காவல் அதிகாரிகளை தரக்குறைவாக பேசி எச்சரிக்கை விடுத்தது அங்கு உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

முதல்கட்ட விசாரணையில் வழக்கறிஞர்கள் ஸ்டாலின், சுபாஷ் சந்திரபோஸ், அய்யம்பேட்டை காமேஷ், கொலை வழக்கு குற்றவாளி ஏனாத்தூர் கமல் ,கோனேரிக்குப்பம் நிர்மல் ராஜ் ,ராஜேஷ் என தெரியவந்தது.

பிடித்து வந்த 22 பேரில் 10க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றப்பின்னணி நிலையில் உள்ளது தெரியவந்ததால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Views: - 76

0

0