சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்: ஒரே நாளில் ரூ.73 ஆயிரம் வசூல்..!!

22 July 2021, 11:58 am
Quick Share

சென்னை: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து மாநகராட்சி சார்பில் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்க காவல் துறையினருடன் இணைந்து சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

At the Theni bus station, Municipal drinking water bottles Fine of Rs.1  lakh per dealer || தேனி பஸ் நிலையத்தில், நகராட்சி குடிநீரை பாட்டிலில்  அடைத்து விற்ற வியாபாரிக்கு ரூ.1 ...

இந்த குழுவின் சார்பில் 15 மண்டலங்களில் மேற்கொண்ட ஆய்வில், அரசின் வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் 73 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும், அம்பத்தூரில் 9 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 80

0

0