தனியார் துறைமுகத்தை படகுகளில் சென்று பழவேற்காடு மீனவர்கள் முற்றுகை… தொடர்ந்து 4வது நாளாக நடக்கும் போராட்டத்தால் போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
26 May 2022, 12:04 pm

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் காட்டுப்பள்ளி எல்என்டி தனியார் துறைமுகத்தை கப்பல்கள் நுழையும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழவேற்காடு பஜார் பகுதியில் தனியார் நிறுவனம் தமிழக அரசிடம் உறுதியளித்த 1500 வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும், 250 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், இதற்கு அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மீனவப் பெண்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பழவேற்காடு பஜார் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மீனவ பெண்கள் மற்றும் மீனவர் சங்க கூட்டமைப்பினருடன் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியும், ஏற்காமல் இன்று தொடர்ந்து நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் அப்பகுதி முழுவதும் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதனிடையே, படகுகளில் சென்று எல்என்டி மற்றும் அதானி தனியார் துறைமுகங்களுக்கு மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கப்பல்கள் நுழையாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?