75வது சுதந்திர தினவிழா: கோட்டையில் கொடியேற்றினார் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Author: Aarthi Sivakumar
15 August 2021, 9:13 am
Quick Share

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார்.

நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்து முதலமைச்சர், அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்தார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்தி வருகிறார். சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளுக்கான அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இந்த விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை டி.வி.யில் கண்டு மகிழுங்கள் என்று அனைவருக்கும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோட்டை பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 309

0

0