பாங்காக்கில் இருந்து வந்த விமானம்.. ஆண் பயணியிடம் இருந்த 20 கிலோ போதைப் பொருள்.. கோவையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 8:14 pm

பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே கோவை வந்த ஆண் பயணியிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உளவுத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பயணியிடம் சோதனை இட்டபோது பச்சை நிறத்தில் கஞ்சா கலவையுடன் கூடிய போதைப் பொருள் என்பது தெரியவந்துள்ளது.

Corn flakes பாக்கெட்டில் வைத்து மறைத்து வைத்து கடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிடிபட்ட பயணியிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் தகவல்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?