அம்மாபள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…கரையோர மக்களுக்கு அலர்ட்!!

Author: Aarthi Sivakumar
2 September 2021, 6:06 pm
Quick Share

திருத்தணி: ஆந்திர அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மாபள்ளி அணை நிரம்பியதையடுத்து நேற்றிரவு 8.30 மணிக்கு அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே வெளியகரம், புண்ணியம் வழியாக சென்று மீண்டும் ஆந்திராவில் உள்ள நகரி வழியாக நல்லாட்டூர், அருங்குளம், லட்சுமாபுரம், நாபலூர், முத்துகொண்டாபுரம் வழியாக சென்று திருவள்ளூர் அருகே பூண்டி ஏரிக்கு செல்கிறது.

இதன்காரணமாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின்படி, அதிகாரிகளுடன் சேர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கரையோரம் வசித்துவரும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லவேண்டும். தங்களது உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Views: - 281

0

0