பறக்கும் பாம்பு… காருக்குள் சிக்கிய அரிய வகை பாம்பால் அதிர்ச்சி : வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 2:31 pm
Flying Snkae - Updatenews360
Quick Share

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேற்குத் தொடர் மலைப் பகுதியான தமிழக கேரளா எல்லையில் உள்ள ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர்.

அப்பொழுது அவரது நான்கு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக சுமார் மூன்று அடி நீளம் கொண்ட பறக்கும் பாம்பு சிக்கிக் கொண்டது.

அதனை வாகனத்தை சுத்தம் செய்யும் போது பார்த்து உள்ளார். உடனே கோவையில் உள்ள பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் காருக்குள் சிக்கியிருந்த பாம்பை லாபகமாக பிடித்துள்ளார். அந்தப் பிடிபட்ட அரிய வகை பறக்கும் பாம்பை உடனடியாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து அவர் கூறும் போது, இதுபோன்று அரிய வகை உயிரினங்கள் அழிந்து வரும் இந்த காலகட்டத்தில் அவற்றைப் பாதுகாக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும் மேலும் இதுபோன்ற உயிரினங்கள் தங்களுக்கு தெரிந்தாலோ அல்லது அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தாலோ அவற்றை கொள்ளாமல் அதனை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் வனத்துறையிடம் உரிய நேரத்தில் தகவல் அளித்து அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

Views: - 189

0

0