இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது: அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

15 July 2021, 2:51 pm
Chennai HC - Updatenews360
Quick Share

சென்னை: இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தை ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவரது மனுவில் “ பழைய மாமல்லபுரம் சாலை மேம்பாட்டிற்காக அரசு கல்லேரி என்ற ஏரியை மண்ணால் நிரப்புகிறது.. இந்த திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும், எனவும், ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல், ஏரியை மணல் போட்டு மூடு சாலை அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், தமிழக அரசு இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள கூடாது.. நீர் நிலையை அழிப்பதற்கு பதிலாக மேல்நிலை சாலை அமைக்கலாம்.. நீர்நிலைகளை மாநில அரசே ஆக்கிரமிக்கக்கூடாது.. இதுதொடர்பாக தமிழக அரசும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.

Views: - 122

0

0