67வது முறையாக 100 அடி நீர்மட்டத்தை எட்டிய மேட்டூர் அணை…….!!

Author: Aarthi
13 October 2020, 11:54 am
metur dam - updatenews360
Quick Share

சேலம்: மேட்டூர் அணை வரலாற்றில், 67வது முறையாக அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது.

கடந்த சில தினங்களாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நேற்று விநாடிக்கு 26 ஆயிரத்து 102 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று 99.10 அடியாக இருந்தத மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில், 67வது முறையாக அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது.

இதனால், சேலம், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழக மக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி விட்ட நிலையில் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு இன்று குறைக்கப்பட்டது.

Views: - 41

0

0