தமிழகத்தில் முதன்முறை.. ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்தவர்களுக்கான தடுப்பூசி முகாம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2021, 11:55 am
Tirupur Vaccine -Updatenews360
Quick Share

திருப்பூர் : தமிழகத்தில் முதன்முறையாக, ரயில் நிலையத்திலேயே வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்

கொரோனா தொற்று இரண்டாவது அலை நிறைவுபெறும் நிலையில், மூன்றாவது அலை இம்மாதம் இறுதியில் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கேரளாவில் தினந்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரளாவிற்கு அருகாமையிலுள்ள திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த இரண்டு தினங்களாக சராசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில், வெளிமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு, திருப்பூர் ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது .

இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்வதுடன், வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு ரயில் நிலையத்திலேயே தடுப்பு ஊசி செலுத்தும் பணி இன்று துவங்கியது.
தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ஊசி செலுத்தும் பணியை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் இன்று துவக்கி வைத்தார். மூன்றாவது அலை பரவுவதற்கு முன்பாகவே திருப்பூர் மாநகராட்சி 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநகராட்சியாக மாற்ற செயல்பட்டு வருவதாகவும் கேரளாவின் மிக அருகாமையில் இருப்பதால் தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

Views: - 641

0

0