மதுரைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் : வீட்டில் வைத்து விசாரணை!!

4 July 2021, 11:17 am
Madurai Manikandan - Updatenews360
Quick Share

மதுரை : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரைக்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணை நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது போலீசார் சார்பில் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர் அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Ex-Min & AIADMK neta M Manikandan booked for rape after actor Shantini  Theva's complaint

மேலும் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் நள்ளிரவு மதுரைக்கு அழைத்து வந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு விசாரணை நடத்த அழைத்துச் வந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மணிகண்டனின் ஜாமின் மனுவை ஜூலை 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 117

0

0