கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் : நடனக்குழுவினருடன் நடனமாடிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 1:20 pm
SP Velumani Oyilattam - Updatenews360
Quick Share

கோவை : சூலூர் கணியூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் சூலூர் கணியூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் அந்த கோவில் திருவிழாவில் கொங்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடனம் ஆடப்பட்டது.

இந்த ஒயிலாட்டம் நடன குழுவினருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்ட நடனமாடினர். இந்த வீடியோ வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த எஸ் பி வேலுமணி தேர்தலுக்குப் பிறகு பிறகு நடனமாடிய வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 438

0

0