காகிதப்பூக்களாக மாறிய திமுக தேர்தல் அறிக்கை : முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan9 October 2021, 1:48 pm
மதுரை : திமுக தேர்தல் அறிக்கை காகிதப் பூக்களாக மாறி விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் T.குன்னத்தூர் கிராம ஊராட்சி பஞ்சாயத்து வார்டு எண் 4ல் நடைபெறும் இடைத்தேர்தலில் வாக்களிக்க, முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் குடும்பத்தாருடன் இன்று வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.
தொடர்ந்து, வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த 202 வாக்குறுதிகள் அனைத்தும் காகித பூக்கள் ஆகவே உள்ளது. அதைப் படித்துப் பார்த்தால் ஒன்றுமில்லாமல் அறிவிப்பாக உள்ளது செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் பெட்ரோல், கேஸ், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் கிடைக்காமல் துயரத்தில் இருந்து வருகிறது.
திமுக அரசின் திருமங்கலம் பார்முலா உலகறிந்த ஒன்று அதை பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக நடைபெறும் 16-வார்டு மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு அளித்தோம், எனக் கூறினார்.
0
0