அமேசான் பெயரை பயன்படுத்தி ‘ஆப்பு‘ வைக்கும் மோசடி கும்பல்! பணத்தை இழந்தவர் புகார்!!

Author: Udayachandran
5 October 2020, 2:17 pm
Amazon Fraud Gang- updatenews360
Quick Share

மதுரை : வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என கூறி மதுரையை சேர்ந்த வாலிபரிடம் 3 லட்சம் சுருட்டிய கும்பல் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் விற்பனை நிலையமான அமேசான் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு உள்ளதாகவும், வீட்டில் இருந்தே இந்த பணிகளை மேற்கொண்டு இலட்ச கணக்கில் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்த மதுரை தீடீர் நகரை சேர்ந்த யாசர் அலி வேலை வாய்ப்பு தொடர்பாக மதுரை கருப்பாயூரனியை சேர்ந்த இளம்பெண்ணை சந்தித்து உள்ளார். அப்போது அப்பெண் 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை 3 வங்கி கணக்கில் செலுத்தினால் Online Worker ID தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி 3 வங்கி கணக்கில் தனித்தனியாக 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார், பின்னர் அப்பெண் அளித்த Online Worker ID ஐ செயல்படுத்த முயன்ற போது போலியான ID என தெரியவந்துள்ளது.

பணத்தை திரும்ப கேட்ட பொழுது அப்பெண் மிரட்டல் விடுப்பதாகவும், இப்பெண் மட்டுமல்ல மோசடி குழு ஒன்று எண்ணற்ற நபர்களிடம் இது போன்ற மோசடி செயலில் ஈடுபட்டு உள்ளதாக யாசர் அலி குற்றச்சாட்டினார்.

இதே போல மாவட்ட வாரியாக முகவர்கள் உருவாக்கி அமேசானில் ஆன்லைன் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என யாசர் அலி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மனு அளித்துள்ளார்.

Views: - 44

0

0