தகாத தொடர்பால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை : விரக்தியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

4 November 2020, 2:43 pm
Illegal Contact Suicide - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : கள்ளக்காதல் விவகாரத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கள்ளக்காதல் ஜோடிகள் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாபட்டு ஊராட்சி ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் வாணியம்பாடி தாலுக்கா ஏரி வட்டம் பகுதியை சேர்ந்த அருள் மகன் சக்திவேல் (வயது 35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சென்றாயன் மனைவி ரீட்டா(வயது 33) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த இருவரும் விஷம் அருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 38

0

0