நாளை முழு ஊரடங்கு எதிரொலி : மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
Author: Babu Lakshmanan15 January 2022, 3:32 pm
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பீரங்கி மேடு பகுதியில் தற்காலிக மீன் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து தொடர் விடுமுறை காலமாக இருப்பதாலும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு இருப்பதாலும், பொதுமக்கள் இறைச்சி கடைகளுக்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த மீன் மார்க்கெட்டில் விரால் மீன் அதிகபட்சமாக கிலோ ரூபாய் 500க்கும், உயிர் கெண்டை மீன் ரூபாய் 200க்கும், விற்கப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாது கூட்டம் கூட்டமாக இறைச்சிக் கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கொரனோவை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு இதனை செய்ய முன்வருமா..? என்று எதிர்பார்ப்போம்.
0
0