மனைவியுடன் உல்லாசம்.. இளைஞர் கொன்று புதைப்பு : இந்த சூழலிலும் பணபேரம் நடத்திய கணவன்… 6 மாதத்திற்கு பிறகு அம்பலமான கதை..!!!

13 July 2021, 7:45 pm
Dharapuram Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : குண்டடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்து புதைத்த கணவன், மனைவி உட்பட 3 பேரை 6 மாதங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.

குண்டடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்து புதைத்த கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 6மாதங்களுக்கு பிறகு பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குண்டடம் அடுத்துள்ள காதப்புள்ளபட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், விவசாயி. இவர் தற்போது தாராபுரத்தில் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் தாராபுரம் அடுத்துள்ள சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 32) என்பவர் தனது மனைவி சித்ரா (வயது 23) என்பவருடன் குடியிருந்து கொண்டு கடந்த 8வருடங்களாக ஆடுமேய்க்கும் வேலை செய்து வருகிறார்.

சித்ராவுக்கு உடல் நிலை சரியில்லையெனக் கூறி பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் வசிக்கும் தனது தம்பி முறையாகக் கூடிய பிரபாகரன் (வயது 17) என்பவரை ரமேஷ் அழைத்து வந்து சித்ராவை கவனித்துக் கொள்வதற்காக தங்களுடன் தங்க வைத்துக் கொண்டார்.

அத்துடன் சின்னக்காம்பாளையத்தைச் சேர்ந்த தனது உறவினரான மணிகண்டன் (வயது 20) என்ற வாலிபரையும் கடந்த 8மாதங்களாக தங்களுடன் தங்க வைத்திருந்தார். அப்போது சித்ராவுடன் பிரபாகரன், மணிகண்டன் ஆகியோருக்கு தகாத தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அடிக்கடி இவர்கள் ரமேஷ் ஆடு மேய்க்கச் சென்ற நேரத்தில் சித்ராவுடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் கடந்த 6மாதங்களுக்கு முன்பு ரமேசுக்கு தெரியவந்ததால் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றிய நிலையில் ரமேஷ், சித்ரா, பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தடியால் தலையில் அடித்துக் கொன்று தாங்கள் தங்கியுள்ள வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டு வழக்கம்போல அவரவர் வேலையை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சித்ராவுக்கு குண்டடம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விசயம் ரமேசுக்கு தெரிந்ததால், ரமேஷ் இந்த கள்ளத் தொடர்பைப் பயன்படுத்தி அந்த வாலிபரை பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அந்த வாலிபர் பணம் கொடுக்க மறுத்ததால், 6மாதங்களுக்கு முன்பு மணிகண்டனை கொன்று இங்கு புதைத்துவிட்டோம். நீ நாங்கள் சொல்கிறபடி நடக்கவில்லை என்றால் உன்னையும் கொன்று புதைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்து உரிமையாளர் பாலசுப்பிரமணியத்திடம் விசயத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் குண்டடம் போலீசில் புகார் செய்தார்.

இது உண்மைதானா என அறிய ரமேஷ், அவரது மனைவி சித்ரா, பிரபாகரன் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் மணிகண்டனைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட எஸ்பி செஷாங்சாய் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

நேற்று தாராபுரம் தாசில்தார் சைலஜா, டிஎஸ்பி தனராசு, குண்டடம் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் மணிகண்டன் பிணத்தை தோண்டி எடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இது தொடர்பாக ரமேஷ், அவரது மனைவி சித்ரா, ரமேசின் உறவுக்காரர் பிரபாகரன் ஆகியோரைக் கைது செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 432

0

0