“வருங்கால முதலமைச்சரே“ : அமைச்சரை புகழ்ந்த தொண்டர்கள்… கடுப்பில் அறிவாலயம்…!!

13 July 2021, 6:21 pm
Congtroversey CM- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்ட நிகழ்வில் தொண்டர் ஒருவர் அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள்தான் முதலமைச்சர் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியில் சமுதாய கூடத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பூமி பூஜை செய்து துவங்கி வைப்பதற்காக வருகை புரிவது தாமதமானதால் அரைமணி நேரமாக பெண்கள் மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்தனர்.

பின்னர் அமைச்சர் வந்த போது தொண்டர் ஒருவர் தொடர்ச்சியாக ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினரின் வெற்றி பெற்ற நமது அண்ணன் சக்கரபாணி அவர்கள் இம்முறை உணவுத் துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் இவர்தான் முதலமைச்சர் என்று கூறியது இப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்த அமைச்சருக்கு போலீஸ் அதிகாரி(பிஎஸ்ஓ) ஒருவர் குடை பிடித்தபடி நின்றது அப்பகுதியில் இருந்தவர்களிடம் முகம் சுளிக்க வைத்தது. அப்போது சக்கரபாணி வருகைக்காக வெடித்ததில் முதியவர் ஒருவர் கையில் காயம் ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் அடுத்தடுத்து சர்ச்சையான சம்பவங்கள் ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சி வெளியாகி வைரலாகிய நிலையில் “என் புருஷன் குழந்தை மாதிரி“ படத்தில் லிவிங்ஸ்டன் வசனத்தை சொல்லி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 222

1

0