பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பிய கும்பல் : காட்டிக்கொடுத்த சிசிடிவி : 3 பேர் கைது..

Author: kavin kumar
18 January 2022, 8:23 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு சார்பு நிறுவனமான கூட்டுறவு பெட்ரோல் பங்கில் நேற்று இரவு 4 நபர்கள் வந்து இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அதற்கான பணத்தை தறாமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த ராஜ்குமார் என்பவர் தனது இருசக்கர வானத்தில் துரத்து சென்று அவர்களை மடக்கு பிடித்து பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மரம கும்பல் பெட்ரோல் பங்க் ஊழியரான ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது இருசக்கர வாகனத்தை பறித்து சென்றுள்ளனர். .‘

பின்னர் சம்பவ குறித்து பாதிக்கப்பட்ட ராஜ்குமார் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில், வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செயபோது அதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தென்னல் பகுதியை சேர்ந்த பழனி, பெருமாள், அன்பரசன், ராஜவேலு மற்றும் சிவானந்தம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பெருமாள், பழனி, சிவானந்தம் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வானகத்தை பறிமுதல் செய்து 3 வரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 402

0

0