நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயற்சி…தனிப்படை போலீசார் எனக்கூறி மர்மகும்பல் துணிகரம்: விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்…!!

Author: Rajesh
23 April 2022, 4:22 pm
Quick Share

சென்னை: புழல் காவல் நிலையம் அருகே நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் கூலிப்படையை ஏவி கடத்த முயன்றனரா அல்லது பணம் பறிக்க கடத்த முயன்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் முகப்பேர் ஜெ.ஜெ.நகரில் இவருக்கு சொந்தமாக 3 நகை கடை மும்பை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதியில் இயங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் 36 அடகுக் கடைகளும் இயங்கி வருகிறது.

ஏ.ஆர்.டி.நகை கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர் நேற்று காலை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகில் நகைக்கடையின் புதிய அடகு கடை கிளையை திறந்து வைத்து விட்டு விழா முடிந்து T.N.10 .BB.100 எண் கொண்ட பென்ஸ் காரில் திருப்பதியில் இருந்து சென்னையை நோக்கி வந்தடையும் போது புழல் காவல் நிலையம், BVK திருமணம் மண்டபம் அருகில் ஜி.என்.டி.சாலையில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களான 7 பேர் கொண்ட கும்பல் திடீரென நகைக்கடை உரிமையாளரின் காரை வழிமறித்துள்ளனர்.

மேலும், தங்களை கொருக்குப்பேட்டை தனிப்படை போலீசார் என கூறி நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோனை கைது செய்ய பிடிவாரண்ட் உள்ளதாக கூறி வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது இருசக்கர வாகனத்தில் வருமாறு அழைத்ததாகவும், இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் மேற்படி புழல் சைக்கிள் ஷாப் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் காரில் இருந்த மற்ற 4 தனிப்படை போலீஸார் காரின் உள்ளே அமர்ந்து கொண்டு காரை எடுக்க முயற்சி செய்த நிலையில் காரை எடுக்க முடியாமல் போனதால் பின்னர் முன்பு பங்கில் நின்று கொண்ட இருந்த மற்றொரு தனிப்படை காவலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது காரின் உரிமையாளர் காரில் சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டதால் காரை இயக்க முடியவில்லை.

பின்பு சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நிலையில்
சம்பவ இடத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஆனந்த் குமார் என்பவர் வந்து விசாரணை செய்யும் போது காவலரிடம் தன்னை தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆனால் பேச்சில் சந்தேகம் இருந்தால் உடனே சுதாரித்துக் கொண்ட தலைமை காவலர் இருதரப்பினரையும் அருகில் உள்ள புழல் காவல் நிலையத்திற்கு வர கூறி அழைத்து வந்ததாகவும் அதில் நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் தரப்பினர் மட்டும் புழல் காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்ததனிப்படை போலீசார் எனக் கூறிய 7 பேரும் ஜி என் டி பிரதான சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் இறங்கி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு புழல் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரான ராபின் ஆரோன் என்பவர் தரப்பினர் தன்னை கடத்த முயற்சி செய்து உள்ளதாக புகார் அளித்ததன் பேரில் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்கில் வந்த 7 மர்ம நபர்கள் யார் ஏன் தனிப்படை போலீசார் என கூறி நகைக்கடை தொழிலதிபரை கடத்த முயற்சி செய்தனர் என பல கோலத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் கூலிப்படையை ஏவி கடத்த முயன்றனரா அல்லது பணம் பறிக்க கடத்த முயன்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 911

0

0