ராமஜெயம் கொலை வழக்கு… அமைச்சர் கேஎன் நேருவிடம் 2 முறை விசாரணை… சிறப்பு புலனாய்வு குழு தகவல்…

Author: Babu Lakshmanan
23 April 2022, 4:19 pm
Quick Share

அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கை தற்போது காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.

அதில் கடந்த மாதம் விசாரணையை துவங்கிய தனிப்படை பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனா். இதனிடையே ராஜெயம் கொலை வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு புலனாய்வு குழு தங்கள் தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனா்.

அவா்களின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜீன் 10ஆம்தேதி அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் திருச்சி கே.கே நகரில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு செயல்பட்டு வரும் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி ஜெயகுமார் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

அதாவது, விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்று தான் நீதிமன்றத்தில் கூறினோம். குற்றவாளிகளை நெருங்குகிறோம் என்று நாங்கள் கூறவில்லை. 48 பேர் கொண்ட எங்களது குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது 100% கொலையாளியை கண்டுபிடித்து முன் நிறுத்துவோம்.

ஆனால் பல்வேறு கோணங்களில் விசாரணை முழுமையாக நடத்தி வருகிறோம். ஏற்கனவே, இந்த வழக்கை விசாரனை செய்த உயர் 6 உயர் அதிகாரிகள் உட்பட 198 நபர்களை விசாரித்துள்ளோம். ராமஜெயம் மனைவி முதல் அமைச்சர் கே.என் நேரு வரை அனைவரையும் விசாரித்து உள்ளோம். இரண்டு முறை கே.என் நேருவை சந்தித்து விசாரணை நடத்தினேன், என தெரிவித்தார்.

Views: - 676

0

0