கோவையில் 33 மையங்கள் நடைபெற்ற பொது தனித்தேர்வு! 445 பேர் எழுதினர்!!

21 September 2020, 8:02 pm
Supplementary Exam - updatenews360
Quick Share

கோவை : கோவையில் 33 மையங்களில் நடைபெற்ற பொது தனித்தேர்வு பணியில் ஆயிரத்து 100 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு இன்று தொடங்கியது. 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தில் 9 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த தேர்வை கோவையில் ஆயிரத்து 445 மாணவர்கள் எழுதினர். பழைய பாடத்திட்டத்தில் 3 மையங்களில் 241 மாணவர்கள் எழுதினர். இதே போல், பத்தாம் வகுப்பு துணை பொதுத்தேர்வை புதிய பாடத்திட்டத்தில் 9 மையங்களில் 256 பேரும், பழைய பாடத்திட்டத்தில் 7 மையங்களில் 799 பேரும் எழுதினர்.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வை 3 மையங்களில் 332 பேரும், தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வை 2 மையங்களில் 106 பேரும் எழுதினர். இந்தத் தேர்வு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலகர்கள் என மொத்தம் ஆயிரத்து 100 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

Views: - 0

0

0