‘நிறைவேற போகுது விவேக்கின் கனவு’: கானா பாடல் மூலம் அஞ்சலி செலுத்திய ரசிகர்..!!

17 April 2021, 5:48 pm
kanchipuram gaana - updatenews360
Quick Share

காஞ்சிபுரம்: நடிகர் விவேக் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் காஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கானா பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியை சேர்ந்தவர் கானா பாடகர் சதீஷ். அவ்வப்போது திரை மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்கள் குறித்த பாடல்களை பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வார். அந்த வகையில் இன்று காலை உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் கானா பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார்.

தற்போது அப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோன்று விவேக்கின் ஒரு கோடி மரம் நடும் கனவை நிறைவேற்றும் வகையில் மரக்கன்றுகளை நட்டும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், பல மரக்கன்றுகளை நடுவோம் என்றும் பாடல் மூலம் தெரிவித்திருந்தனர்.

Views: - 15

0

0