அமைச்சருக்காக தயார் செய்யப்பட்ட ராட்சத ரோஜா மாலை : அறிவாலயத்தில் காத்திருந்த திமுகவினருக்கு அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 12:38 pm
Giant Roja Garland - Updatenews360
Quick Share

திருச்சி : கிரேன் மூலம் கொண்டுவரப்பட்ட மெகா ரோஜா மாலையை அமைச்சர் கேஎன் நேரு ஏற்க மறுத்துவிட்டார்.

திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில், 500 கிலோ எடை கொண்ட ரோஜா பூ மாலையை திமுகவினர் தயார் செய்தனர்.

அந்த மெகா சைஸ் ரோஜா மாலையை அமைச்சர் கே.என் நேருவுக்கு அணிவிக்க கிரேன் மூலம் கொண்டு வந்த திமுகவினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க கலைஞர் அறிவாலயத்திற்கு வந்த அமைச்சர் கே.என் நேரு மெகா சைஸ் மாலையை பார்த்து, ஆடம்பரம் வேண்டாம் என கூறி மாலையை ஏற்றுக் கொள்ளாமல் சென்றார்.

Views: - 239

0

0