மத்தியபிரதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுமி திருப்பூரில் மீட்பு : காதலன் கைது!!

17 January 2021, 10:12 pm
Minor Girl Kidnap - Updatenews360
Quick Share

திருப்பூர் : மத்திய பிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுமியை மீட்ட, திருப்பூர் வடக்கு போலீசார் உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா என்ற பகுதியிலிருந்து கடத்தப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் காதலன் ஆகிய இருவரும் திருப்பூரில் இருப்பதாக பட்டகாடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் திருப்பூர் வந்த போலீசார், திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசனிடம் உதவி கேட்டதன் பேரில், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமா நகர் சரண் தியேட்டர் அருகில் தங்கியிருந்த சிறுமியை மீட்டும், சிறுமியின் காதலன் பிஜேஸை கைது செய்தும் மத்திய பிரதேசம் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர் வசம் ஒப்படைத்தனர்.

இச்செயலை செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Views: - 10

0

0